Home » Latest Stories » வெற்றிக் கதைகள் » ஒருங்கிணைந்த விவசாயத்தில் சாதித்த இளைஞர்

ஒருங்கிணைந்த விவசாயத்தில் சாதித்த இளைஞர்

by Gunasekar K

தனித்துவமான முயற்சி மற்றும் புதுமையான வழிகள் உதவியுடன் ஒருங்கிணைந்த விவசாயத்தில் தொடங்கி ஆடு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு என அனைத்திலும் சாதிக்கும் இளைஞர்.  

ஒருங்கிணைந்த விவசாயத்தில் வெற்றி பெற்ற இளைஞர் 

தெலுங்கானா மாநிலத்தைச் 23 வயது இளைஞர் வம்சி நடுத்தர குடும்ப ஒரு பி.காம் பட்டதாரி. ஒரு வெற்றிகரமான ஒருங்கிணைந்த விவசாயி என்றால் நம்ப முடிகிறதா? கற்றுக்கொள்ளும் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் மலையும் ஒரு மடு தான். வம்சியின் தந்தை விவசாயத்தில் எதிர்கொண்ட நஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தவர். தனது தந்தைக்கு நிதி ரீதியான ஆதரவைத் தர வேண்டும் என்றெண்ணி அதற்கான முயற்சிகளைச் செய்தார்.  

யூ டியூப்பில் வீடியோக்கள் பார்க்கும்போது Boss Wallah பற்றி அறிந்தார். இந்த ஆப்-ல் ஒருங்கிணைந்த விவசாயம் தொடர்பான கோர்ஸை பார்த்து தனது நிலத்தில் பல வகை காய்கறிகளைப் பயிரிட்டு நல்ல லாபம் பெற்றார். ஆடு வளர்ப்பில் 1 லட்சம் முதலீடு செய்து 34 ஆடுகளில் இருந்து 20,000 ரூபாய் லாப வரம்புடன் 1 முதல் 2 லட்சங்கள் வரை ஈட்டினார்.  

சாதிக்க வயது தேவையில்லை – ஆர்வமும் ஊக்கமும் போதும் 

ஒருங்கிணைந்த விவசாயத்தில் பெற்ற வெற்றியால் ஊக்கம் அடைந்த வம்சி தற்போது ஆடு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு என அனைத்தையும் உள்ளடக்கி சிறப்பாக செய்து வருகிறார்.

70 ஆயிரம் முதலீடு செய்து பட்டுப்புழு வளர்ப்பையும் தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் முதல் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற போகிறார். 

அடுத்ததாக ஆடு வளர்ப்பில் 50 ஆட்டுக்குட்டிகள் வரை வளர்க்க முடிவு செய்துள்ளார். மேலும், பல வணிகங்களிலும் தடம் பதிக்க முடிவு செய்துள்ளார். தனது தந்தை அடைந்த தோல்விகளால் சோர்ந்து விடாமல் முயற்சிகள் வாயிலாக ஒருங்கிணைந்த விவசாயம், ஆடு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு என விரிவுபடுத்தியுள்ளார். 

Boss Wallah அளித்த ஊக்கம் மற்றும் ஆதரவு 

விவசாயம் குறித்து எதுவும் தெரியாத வம்சி, Boss Wallah-ல் ஒருங்கிணைந்த விவசாயம் பற்றி அனைத்து உத்திகள், நுட்பங்கள் பற்றி அறிந்து இன்று விவசாயத்தில் சாதிக்கிறார். விவசாயம், வணிகம் தொடர்பான உத்திகளை இந்த ஆப் வாயிலாக தெரிந்துகொண்டார். Boss Wallah புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்புபவர்களுக்கு மிக சிறந்த ஆதாரமாக விளங்குகிறது – வம்சி. 

Related Posts

© 2025 bosswallah.com (Boss Wallah Technologies Private Limited.  All rights reserved.