Home » Latest Stories » வெற்றிக் கதைகள் » டிஜிட்டல் தளத்தில் சாதிக்கும் கிரானைட் தொழிலாளி

டிஜிட்டல் தளத்தில் சாதிக்கும் கிரானைட் தொழிலாளி

by Gunasekar K

கிரானைட் தொழிலாளியான லுக்மென் சமூக வலைத்தளமான யூ டியூப்-ல் வாழ்க்கை முறை, வேட்டையாடுதல் மற்றும் விவசாயம் தொடர்பான வீடியோக்களைப் பதிவிடுகிறார். இவர் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவைப் பூர்வீகமாக கொண்டவர். 

கிரானைட் முதல் யூ டியூப் வரை 

லுக்மேன், ஒரு கிரானைட் தொழிலாளி. யூ டியூப் வாயிலாக Boss Wallahஆப் பற்றி அறிந்தார். Boss Wallah-ல் கோழி வளர்ப்பு, யூ டியூப் கோர்ஸ் மற்றும் பிற வணிகக்  கோர்ஸ்களைப் பார்த்தார். பின்னர், Boss Wallah-ன் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆனார். பின்னர், தனது சொந்த யூ டியூப் சேனல் தொடங்கி அதில் வாழ்க்கை முறை, வேட்டையாடுதல் மற்றும் விவசாயம் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.  

Boss Wallah அளித்த உத்திகள் மற்றும் நுட்பங்கள் 

“எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது என்றாலும் எனக்கு ஊக்கமளித்து எனது தேவைகள், இலக்குகளைக் கேட்டு அறிந்தனர். எனக்கு புரியும் வகையில் எனது மொழியில் விளக்கினர். இந்த ஆப்-ல் லுக்மேன் கோழி வளர்ப்பு, யூ டியூப் மற்றும் பிற வணிகக் கோர்ஸ்களைப் பார்த்தார். 

மேலும், ஆன்லைன் புரொமோஷன்கள், தம்ப்நெய்ல் உருவாக்கம், டைட்டில்கள் உருவாக்கம் போன்றவற்றை Boss Wallah-ன் ஒரு வெற்றிகரமான சமூக வலைதள வீடியோ உருவாக்குநராக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். சிறிது காலத்திற்கு பின்பு முழு நேர விவசாயம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.    

சாதிக்க மொழி ஒரு தடையல்ல 

லுக்மென், தொடக்கத்தில் தனது வீடியோக்களை ஹிந்தி மொழியில் பதிவிட்டு வந்தார். ஆனால், Boss Wallah-ன் யூ டியூப் கோர்ஸைப் பார்த்த பிறகு தாய்மொழியில் அறிந்துகொள்ள வேண்டும் எனும் மக்களது மாறி வரும் இன்றைய மனநிலைக்கு ஏற்ப தனது தாய்மொழியான தெலுங்கு மொழியில் வீடியோக்களை உருவாக்க தொடங்கினார். இதனால், லுக்மேன் யூ டியூப் சேனலிற்கு 3000 சந்தாதாரர்கள் பெற்றுள்ளார். 

தொடக்கத்தில், பலரும் எனது பேச்சு திறன்கள், பேச்சு வழக்கைப் கிண்டல்  செய்தனர். ஒவ்வொரு நாளும் என்னை நான் மேம்படுத்தி கொண்டே  வருகிறேன். யூ டியூப் வாயிலாக அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறேன் என்றும் கூறுகிறார். இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும்,  ஒவ்வொரு கோர்ஸையும் பத்து முறைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன் மற்றும் எனது விருப்பத்திற்கு ஏற்ப விருப்பமான நேரத்தில் கற்றுக்கொள்கிறேன் என்று லுக்மேன் கூறுகிறார்.

Related Posts

© 2025 bosswallah.com (Boss Wallah Technologies Private Limited.  All rights reserved.