Home » Latest Stories » வெற்றிக் கதைகள் » வாழ்க்கையில் மாற்றம் தரும் மஷ்ரூம் வளர்ப்பு

வாழ்க்கையில் மாற்றம் தரும் மஷ்ரூம் வளர்ப்பு

by Zumana Haseen

ஹைதராபாத் மாநிலம், தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்ரமணியம் Boss Wallah-ல் உள்ள காளான் வளர்ப்பு கோர்ஸைப் பார்த்து தனது வாழ்க்கையை மாற்றியமைத்தார். 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்து இருந்தாலும் வேளாண்மை பற்றி சரியாக தெரியாது என்றாலும் அவருக்கு வேளாண்மை  பின்னணி இருந்தது. மேலும், விவசாயம் மீதான சுப்ரமணியத்தின் பேரார்வம் மாறவில்லை. தனது குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைத்து தர புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருந்தார்.

Boss Wallah பற்றி அறிந்த பிறகு, மஷ்ரூம் வளர்ப்பு மீதான தனது விருப்பத்தை உணர்ந்துகொண்டார்.Boss Wallah-ல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும்  பால் காளான் வளர்ப்பு முறைகள் பற்றி அறிந்து கொண்டார். நான்கே மாதத்தில் காளான் வளர்ப்பை மாதம் 20 முதல் 30 ஆயிரங்கள் வருமானம் தரும் வெற்றிகரமான விவசாயமாக மாற்றினார்.  

திறன்களை வளர்த்துக் கொண்டால், வருமானம் தானே பெருகும் 

எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முதல் தேவை ஆர்வம். இரண்டாவது முயற்சி. மூன்றாவது அந்தத் தொழில் சார்ந்த திறன்களைப் பெறுதல். நான்காவது பெற்ற திறன்களைச் செயல்படுத்துதல். சுப்ரமணியத்தின் ஆர்வம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி அவருக்கு மிக சிறப்பான வெற்றியை அளித்துள்ளது. தற்போதைய தொற்றுநோய் காலத்தில் நமது சைவ உணவு உண்பவர்களின் புரதத் தேவையை காளான் தான் அளித்தது. புரதம், நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காளானை நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு சமைத்து உண்ணலாம். சிப்ஸ், நக்கட்ஸ், சூப், சாஸ் என பல வகைகளில் சமைத்து உண்ணலாம். 

தற்போது, அவரது குடும்பம் அவர் விரும்பியபடி வாழ்கிறது. நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “No Pain No Gain” மற்றும் தமிழில் முயற்சி திருவினையாக்கும் எனும் முதுமொழி உண்டு. இவற்றின் பொருள் நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பதே.  

வாழ்க்கையில் முன்னேற கல்வி ஒரு தடை அல்ல  

இந்த ஆப் காளான் வளர்ப்புக்கு தேவையான அறை வெப்பநிலை, ஈரப்பதம், பால் காளான் முதல் பிற பல வகை காளான்களை வளர்ப்பதற்கான படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது. மஷ்ரூம் வளர்ப்பில் சுப்ரமணியம் பெற்ற வெற்றி மற்றும் வருமானம் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இவர்கள் அளித்த ஊக்கம் பிற விவசாய முயற்சியான செம்மறி ஆடு வளர்ப்பை  ஆரம்பிக்க திரு. சுப்பிரமணியத்தைத் தூண்டுகிறது. 

குறைந்த அளவு கல்வி, நிதி ஆதாரம், பிற ஆதாரங்கள் இருந்தாலும் உங்களிடம் ஆர்வம், விடாமுயற்சி, சரியான வழிகாட்டுதல் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை சுப்ரமணியத்தின் கதை விளக்குகிறது. கூடுதலாக, Boss Wallah நிதி சுதந்திரத்தையும், நிதி சார்ந்த அறிவையும் சுப்ரமணியத்திற்கு அளித்து அவரது நிதி இலக்குகளை அடையவும் உதவியது.

இந்த ஆப் உள்ள கோர்ஸுகள் சாதாரண மக்கள் முதல் நிபுணர்கள் வரை அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலான உள்ளடக்கம் மற்றும் வீடியோக்கள் உள்ளது. மேலும், இவை அனைத்தையும் உங்கள் விருப்பமான நேரத்தில் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்.

குறைந்து முதலீட்டில் இவ்வளவு வருமானம் ஈட்ட முடியுமா? இன்றும் என்னால் நம்ப முடியவில்லை. சரியான அறிவுத்திறன் மற்றும் ஆதாரங்களுடன் யார் வேண்டுமானாலும் அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ளலாம் – சுப்ரமண்யம்

Related Posts

© 2025 bosswallah.com (Boss Wallah Technologies Private Limited.  All rights reserved.