Home » Latest Stories » விவசாயம் » வளமான வாழ்க்கைக்கு வித்திடும் நாட்டு கோழி வளர்ப்பு

வளமான வாழ்க்கைக்கு வித்திடும் நாட்டு கோழி வளர்ப்பு

by Gunasekar K

மனிதன் அறிந்த தொழில்களில் மிகவும் பழமையானது விலங்கு வளர்ப்பு. மனிதன், நாகரீகம் வளர வளர தன்னை சுற்றியுள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள தொடங்கினான். மனிதன் விரைவில் பழக்கிய விலங்குகளில் கோழி, ஆடு மற்றும் மாடு முதல் மூன்று இடங்களை பிடிக்கின்றன. இவற்றுள் குறைவான காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதன்மையான விலங்கு வளர்ப்பு கோழி வளர்ப்பே. ஏனென்றால், கோழியின் இறைச்சி, முட்டை மற்றும் கழிவு என அனைத்தும் மிக சிறந்த வணிக மதிப்பைக் கொண்டுள்ளது. 

தற்போதைய நவீன உலகில் இயற்கை உணவிற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை நாடுகின்றனர். அத்தகைய உணவுகளில் ஒன்று நாட்டு கோழி. சந்தைகளில் பெரும்பாலும் விற்கப்படும் பிராய்லர் கோழிகள் போலில்லாமல் நாட்டு கோழிகள் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. ஆகையால், நாட்டு கோழி இறைச்சி முட்டை போன்றவற்றுக்கு அதிக சந்தை தேவை உள்ளது. எனவே, நாட்டு 

கோழி வளர்ப்பின் எதிர்கால வாய்ப்புகள் மிகவும் நன்றாக உள்ளது. 

எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும் நாட்டு கோழி இறைச்சி 

பொதுவாக, மனிதர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அதிக அளவிலான புரதம் தேவைப்படுகிறது. 24 கிராம் புரதமுள்ள நாட்டு கோழி இறைச்சி இந்த தேவையை மிகவும் எளிதாக பூர்த்தி செய்து விடுகிறது. மேலும், இந்த அளவிலான புரதம் வலிமையான தசைகள் மற்றும் உறுதியான எலும்புகளை அளித்து எலும்பு தேய்மானம் போன்ற காயங்கள் மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகிறது.

மேலும், சிவப்பு இறைச்சிகளை ஒப்பிடும்போது நாட்டு கோழி இறைச்சியில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் பொருத்தமானது. அதிக புரதச் சத்து காரணமாக பசி உணர்வைக் குறைப்பதால் எடை குறைப்பிலும் நாட்டு கோழி இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. எடையைக் குறைப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

அமினோஅமிலங்கள், புரதங்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த ஊட்டச்சத்து உணவு 

நாட்டு கோழி இறைச்சியில் வைட்டமின் B12, கோலைன், ஜிங்க், இரும்பு மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. அத்துடன் நமது மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் செரடோனின் அளவை அதிகரிக்க தேவையான ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது.

ஜிங்க், இரும்பு மற்றும் தாமிரம் போன்றவை முறையே நமது நோய் எதிர்ப்பு சக்தி, இரத்தக் கூறுகளின் உருவாக்கம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

கோழி இறைச்சி தொடர்பான சமீபத்திய ஆராய்ச்சி அர்ஜினின், லியூசின் மற்றும் லைசின் போன்ற அத்தியாவசியம் மிகுந்த அமினோ அமிலங்களை அதிகப்படியான அளவுகளிலும் குளுட்டமிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அலனைன் போன்ற அத்தியாவசியம் குறைந்த அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது.  

பிற இறைச்சிகளுக்கு இல்லாத பல சிறப்புகள் கோழி இறைச்சிக்கு உள்ளது. உலகிலேயே அதிக அளவு மதிப்புக்கூட்டப்பட்ட இறைச்சிகளில் கோழி இறைச்சி முதன்மையானது. அதே போல, மாறுபடும் கலாசாரம், பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அதிகமான உணவு வகைகளாக சமைக்கப்படும் உணவுகளில் கோழி இறைச்சி முதன்மையான இடத்தில் உள்ளது.   

உங்கள் தொடர் வருமானத்தை உறுதிசெய்யும் நாட்டு கோழி வளர்ப்பு

நாட்டு கோழி இறைச்சி, முட்டை மற்றும் கழிவிற்கு அதிகமான சந்தை தேவை உள்ளது. உதாரணமாக 1 கிலோ நாட்டு கோழி இறைச்சி 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கிறது. அதைப் போல ஒரு நாட்டு கோழி முட்டை 10 ரூபாய் வரை விற்கிறது. மேலும், இயற்கை உரத் தயாரிப்பில் பயன்படும் கோழி கழிவு 1 டன் 1350 ரூபாய் வரை விற்கிறது. 

எனவே, நீங்கள் இறைச்சி, முட்டை மற்றும் கழிவு என மூன்று வழிகளில் இருந்து வருமானம் பெறலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது முறையான பராமரிப்பு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனம், நீர் மற்றும் நோய் மேலாண்மையை நன்றாக செய்வது. எனவே, நாட்டு கோழி வளர்ப்பு அளவற்ற லாபம் தரும் விலங்கு வளர்ப்பு தொழிலாக உள்ளது.   

முடிவுரைநாட்டு கோழி வளர்ப்பு வழியாக ஆண்டுக்கு 6 லட்சங்கள் சம்பாதிப்பது பற்றி தெளிவாகவும் விரிவாகவும் Boss Wallah ஆப் வழியாக அறிந்துகொண்டோம்.

Related Posts

© 2025 bosswallah.com (Boss Wallah Technologies Private Limited.  All rights reserved.